தேசிய கல்விக்கொள்கை-ஒரு பார்வை

exams

 

பாஜக மத்திய அரசில் தனது ஆட்சியை நிலை நிறுத்திய உடனே தனது காவிக்கொள்கைகளை மறைமுகமாக எல்லா துறைகளிலும் திணிக்க முனைப்பாக செயல்படுகிறது.கல்வித்துறையிலும் தனது கொள்கைகளை தறபோது திணிக்க எத்தனித்துள்ளது.கல்வியில் பெரும் மாற்றத்தை உருவாக்க ஒரு புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் மக்களின் கருத்தை கேட்கவேண்டும்.இதற்கான காலக்கெடு செப்டெம்பர் 15,2016 என நிர்ணயித்துள்ளது.. தேசியக் கல்விக் கொள்கை வரைவை நோக்குங்கால் இது உயர்மடட கல்வி அதிகாரிகளால் உருவாக்கபபடடதாக தெரிகிறது.மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் சில முன்மொழிவுகள் உள்ளன..அதே மாதிரி சமஸ்கிருதத்தை இந்தி பேசாத மக்களிடம் திணிக்கும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.

இவ்வரைவில் அடங்கியுள்ள சில குறிப்புகளை காண்போம்.

மழலையர் கல்வி அதாவது கே.ஜி வகுப்புகள் வயது (4-5) இதுவரை தனியார்கள் நடத்தி வருகின்றனர். இந்த வரைவின் படி இனி அரசு பள்ளிகளிலும் மழலையர் கல்வித்திடடம் செயல்படும். .இதற்கான நடைமுறை திடடம், ,ஆசிரியர்கள் மற்றும் கடடமைபுக்களை சார்ந்த செயல்பாட்டு முறைகளை அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயிக்கும். தனியார் மழலையர் பள்ளிகளுக்கும் அரசு உரிய சடட திட்டங்களை வகுக்கும். தறபோது நாட்டுக்கு தேவை சமூக நல்லிணக்கம்,ஒற்றுமை,மத மற்றும் இன சார்பற்ற போக்கு இறையாண்மை காத்தல் போன்றவைகள் ஆகும் இவைகளுக்கு ஒத்திசைந்தவாறு பாடத்திட்ட்ங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்கள் தேசிய அளவில் எல்லா வகுப்புக்கும் ஒரேமாதிரி இருக்க இந்த ஆவணம் முன்மொழிகிறது.. இதிலும் இரு பிரிவுகளை உண்டாக்கி -மாணவர்களின் தகுதிக்கு தகுந்தவாறு A பிரிவு B பிரிவு என்று பிரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாநிலங்களிருந்து படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வெளியேறும் சான்றிதழ் இடம் பெயர்வு சான்றிதழ் தறபோது தேவைபடுகிறது.இந்த ஆவணத்தில் இதை நீக்கியுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை எந்தவித தடையின்றி குழந்தைகள் படிக்கலாம் என்று இந்த வரைவு கூறுகிறது அதாவது ஐந்தாம் வகுப்பு வரை தான் தடையில்லா தேர்சசி இருக்கும். ஒவ்வொரு மாநிலமும் எந்தந்த இடத்தில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருக்கிறதோ மற்றும் எங்கெங்கு பள்ளிகளில் உரிய உட் கடடமைப்பு வசதிகள் குறைவாக இருக்கிறததோ அவ்விடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறுகிறது..

இளம் வயதினர் கல்விக்கொள்கை மற்றும் தேசிய மக்கள் கல்விக் கொள்கை இவைகளை பள்ளி பாடத்திட்ட்ங்களின் படிபடியாக இணைக்க முயற்சி பண்ணப்படும். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினை பற்றிய ஆலோசனைகளை கொடுக்க கல்வி ஆலோசர்கள் நியமிக்கப்படுவார்கள். தகுதியை அடிப்படையாகவும் சமூக நிதியை நிலை நாட்டிடவும் தேசிய அளவில் ஒரு கல்வி நிதி தொடங்கி அதில் 10 லடச மாணவர்களுக்கு கல்வி பயிற்சி கடடணம், பாடப்புத்தகம், மாணவர்கள் தாங்கும் விடுதிக்கு கடடணம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி கல்விகற்பிக்கப்படும் ..

இளம்வயதினர் கல்வித்திடடத்தை (Adult education Programme ) புதுப்பிக்கவும் வலுவாக்கவும் கல்வி நிபுணர்கள் கொண்ட ஒரு தலைமை அமைப்பை தொடங்கி இளம் வயதினர் கல்வி, மற்றும் ,திறன் பாடுகளை ஆராய்யும்.. பள்ளிகளில் மாணவர்களின் திறன் வளர்சசி திடடம் உயிரூட்டப்படும்.பள்ளி மாணவர்களுக்கு வேலை கிடைக்க ஏதுவாக 'திறன் பள்ளிகள்' ஆரம்பித்து எடடாம் வகுப்பிலிருந்து 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை சம்பந்தபபடட பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படும். இதனால் திறன் குழுவினர் மற்றும் பள்ளி/கல்லூரி அதிகாரிகள் கொடுக்கும் சான்றிதழ் மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது என்று குறைப்படுகிறது.. தகவல் மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தபபடட படிப்பு மாணவர்கள் பாடத்திட்டத்தில் படிபடியாக இணைக்க முயற்சி பண்ணப்படும்

தேசிய அளவில் ‘ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்’ ஒன்று நிறுவப்படும். இதில் ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் வளர்சசி சம்பந்தபபடடவைகளை குறித்து கற்றுக் கொடுக்கப்படும்.. மாநிலங்கள் விருப்படி ஐந்தாம் வகுப்பு வரை பாடங்களை அவரவர் தாய மொழியில் கற்றுக் கொடுக்கலாம் பள்ளிக் கல்வியில இந்திய பண்பாடு.பாரம்பரிய கலாசசாரம்,முதலியவைகள் முக்கியத்துவம் பெறும்... சமஸ்கிருதத்தின் தனி முக்கியத்துவம் மற்றும் இந்திய கலாசார ஒற்றுமைக்கு வழி காட்டும் அதன் பங்கினை அறிந்து ,பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதனை கற்பிக்க எல்லா விதத்திலும் ஊக்குவிக்கப்படும். உடற்பயிற்சி, யோகா,என் எஸ்.எஸ் ,என் சி.சி விளையாட்டு,உள்ளூர் கலை, இலக்கியம் போன்றவைகள் பாடத்திடடத்தில் முக்கிய இடம் பெரும்.இவைகளை கற்பிக்க தேவையான வசதிகள் கொண்ட பள்ளிகளுக்குத்தான் அங்கீகாரம் கொடுக்கப்படும்.

பள்ளிகளின் தரவரிசைகளையும் ஆசியர்கள் திறமை பள்ளிகளின் ஆளுமை திறன் இவைகளை அளவிட ஒரே விதமான அளவீடுகள் தேசிய அளவில் நடைமுறைபடுத்தபபடும். உயர் கல்வியில் தரம் உயர்த்த உலக அளவில் உள்ள கல்வி நிபுணர்களின் ஆலோசைகளை கருத்தில் கொண்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.தரவரிசையில் முதல் 200 கல்வி நிறுவனக்களின் பேராசிரியர்கள் முனைவர்கள் கல்வி மேதைகள் இவர்களின் தொண்டுகளை இந்திய கல்விக்கூடங்களை கொண்டுவந்து இந்திய கல்வித்திறனை உலக அளவுக்கு கொண்டு போக முயற்சி பண்ணப்படும்.

சில கோரிக்கைகள்

இந்த கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் கொடுக்கும் முன் இதனால் உருவான சில சிக்கல்களை அரசு கண்ணோக்கவேண்டும் ..அவைகளை முதலில் சரி செய்ய வேண்டும், ஏக இந்திய ,ஏக மொழி,ஏகபபண்பாடு என்ற அடிப்படையில் சமஸ்கிருதத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கடடாயமாக் திணிக்கும் முயற்சி ஏற்புடையது அல்ல. இதனால் எல்லா மாநிலங்களிலும் கொந்தளிப்பு உண்டாகும்.எனவே அரசு இதிலிருந்து விடுபட சமஸ்கிருதத்தை கைவிடவேண்டும். பாடத்திட்டங்களை சீர்திருத்தம் செய்யும்போது குறிப்பாக வரலாற்றுப்பாடங்களில்,வரலாற்றுக்கு மாறாக காவி சிந்தனைகொண்ட கொள்கை இடம் பெறாமல் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் அறிவியல் கணக்கு ஆங்கிலம் பாடங்களில் தேசியஅளவில் ஒரேமாதிரியான பாடத்திட்ட்ங்கள் அமைய போவதாக இந்த ஆவணம் கூறுகிறது .ஆனால் அறிவியல் கணக்கு எந்த மொழியில் கற்பிக்கப்படும் என்று கூறப்படவில்லை ஆங்கிலத்தில் கற்பிப்பதே நன்று என படுகிறது இதனால் (NEET) பரிட்சை எழுதுவது எல்லா மாணவர்களுக்கும் எளிதாய் இருக்கும்.

தேசிய கல்வி நிதியத்தின் திட்டத்தின் படி 10 லடச மாணவர்களுக்கு இலவசமாக படிக்கவும் தங்கவும் நிதி உதவி ஒதுக்கப்படும் என்பது நல்ல திட்டம் என்றாலும் அதில் எஸ் சி எஸ் டி மாணவர்களின் நிலை என்ன என்பது புதிராக இருக்கிறது.சடடப்படி இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளின் நிலைபாடு என்ன என்பது புரியவில்லை.. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்பிப்பிக்கலாம் என்று தாராள மனத்தோடு இந்த ஆவணம்கூறுகிறது. இது பிராந்திய மொழிகளை அழிக்கும் முயற்சி ஆகும்.பத்தாம் வகுப்பு வரை தாயமொழி கல்வி அவசியம்.என்பதை அரசு உறுதி செய்யவேண்டும். எல்லா பள்ளிகளிலும் உட் கட்டமைபுகளின் அவசியத்தை நிலைநாட்ட மாநில அரசுகள் பள்ளிகளுக்கு மானியம் வழங்கவேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும். கல்வி பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் ஏற்படுத்துதலை தவிர்த்து அதை நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். எல்லா பள்ளி மாணவர்களுக்கும் 12—ம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்கவேண்டும். தொழில் கல்வி 8-ம் வகுப்புக்கு பதில் 11-ம் வகுப்பிலிருந்து தொடங்கவேண்டும்.மாணவர்களின் இளம் வயது சுதந்திரத்தைபறிக்க க்கூடாது இறுதியாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உறுதிசெய்யபபடட விடுதலை,சமூக நீதி சமுத்துவ நீதிக்கு எவ்வித பாதிப்பும் வராதபபடி இந்திய கல்விக்கொள்ளை அமைய வேண்டும். நம் கல்வி....நம் உரிமை.சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்துகு வழிவகுக்கும்.இன்றைக்கு ஆங்கிலம் ஆங்கிலம் என்னு சொல்லி எதை சாதித்திருக்கிறோம் ? தமிழ்லேயும் சரி, ஆங்கிலத்திலேயும் சரி, பிழையில்லாம ஒரு கடிதம் எழுதக்கூடத் திராணியில்லாத கூட்டத்தை நாம் உருவாக்கிக்கிட்ருக்கிறோம். சமூக மாற்றம் நிகழாமல் கல்வி மாற்றம் பற்றி பேசுவது அபத்தம்.என முடிக்கிறேன்.

‘’ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே;

பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது,

அவருள் அறிவுடையோன்று அரசும் செல்லும்,

வேற்றுமை தொ¢ந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் காண்படுமே’’ -- புற நானுறு –

--- அன்புடன் ஆசிரியர்.எம் ஜெயம்.---