சாதி,மதம் மொழி அடிப்படையில் ஓட்டு

cow

 

அண்மையில் (02-01-2017)  உச்ச  நீதிமன்ற    முதன்மை நீதிபதி டி  எஸ் தாகூர் தலைமையிலான ஏழு  நீதிபதிகள்  கொண்ட  ஒரு  அமர்வு   இந்திய  தேர்தல்   பிரசாரத்தில்  ஒரு  புதிய   அணுகுமுறையை  அறிமுக  படுத்தியுள்ளது. இந்த  சீர்திருத்த  சடடத்தின்படி   தேர்தலில்  நிற்கும்  யார்  ஒருவர்  தன்னுடைய   அல்லது  வாக்காளர்களுடைய  சாதி, மதம், மொழி   நம்மிக்கை அல்லது  சமுதாயத்தை       மேற்காட்டி அவர்களை தூண்டி விட்டு    வோட்டு  பெற்றால்   அல்லது வோட்டு போடக்கூடாதென்றால்  அது  ஊழல்  முறை  ஆகும் என்று நான்கு நீதிபதிகள் ஆதரவாகவும் மூன்று நீதிபதிகள் அதற்கு எதிராகவும்   நான்கிற்கு  மூன்று என்ற  பெரும்பான்மையில்   நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த  ஊழல்   அணுகுமுறை    மக்கள்  பிரதிநிதித்துவ சடடம் பிரிவு 123(3) -ன் படி சடடவிரோதம் ஆகும்

 
மகாராஷ்டிராவில் கடந்த 1995ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மனோகர் ஜோஷி, இந்துத்துவா கொள்கைகளை பிரசாரம் செய்து வெற்றி பெற்றார் என்றும், எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் என். பி. பாட்டீல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து, ‘இந்துத்துவா அல்லது இந்து மதம் என்பது இந்திய துணை கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை’ என்றும், இதன் அடிப்படையில் வாக்குகள் சேகரிப்பது வேட்பாளரை பாதிக்காது’ என்றும் தீர்ப்பில் கூறியிருந்தனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.


கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தும் என கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி டி. எஸ். தாக்குர் தலைமையில் நீதிபதிகள் லோகூர், பாப்தே, கோயல், லலித், சந்திரசூத், நாகேஸ்வரராவ் ஆகிய 7 நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்தது.


இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த பல்வேறு மனுக்களும் விசாரிக்கப்பட்டன. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மதங்கள் மற்றும் சாதிகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது சட்ட விரோதமானது.தேர்தல் என்பது மதசார்பற்ற நடைமுறையாகும். இது தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவு தனிப்பட்டதாகும். இது போன்ற நடவடிக்கைககளில் அரசு தலையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர்.
 மேற்கண்ட பிரிவின் படி மதத்தை வைத்தோ அல்லது தேசிய சின்னங்களான தேசிய கொடி ,அசோக சக்கரம் முதலியவற்றை வைத்து பிரசாரம்  பண்ணி வோட்டு சேகரிப்பதும் சடட விரோதம் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் செயல்படுத்த  முடியாதது  ஒன்று .நம் நாடு மொழியாலும் மதத்தாலும் கலாசசாரத்தாலும் பிரிந்துள்ளது.இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்றபடி ஒரு ஐக்கிய  நாடாக  ஒன்றுபட்டு திகழ்கிறது..இதில் ஒரு சிறு குழபபம் இருந்தாலும்  எளிதில் வன்முறை ஏற்பட்டுவிடுகிறது. நீதிபதிகள் தீர்ப்பு சொல்லும்போது இதை கவனத்தில் வைக்கவில்லை என்றே தெரிகிறது.  உச்ச  மன்றம் 1995-ல் ஹிந்துத்வா என்ற சொல்லாடலுக்கு விளக்கம் கொடுக்கும்போது  ஹிந்துத்துவா "ஹிந்து" என்ற மதத்தை குறிப்பிடவில்லை என்றும் ஹிந்து என்பது ஒரு மதம் கிடையாது என்றும் அது ஒரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறி என்றும் தீர்ப்பளித்தது .இந்த தீர்ப்பானது சமுதாய மற்றும் ஆன்மிகபார்வையில் முரண்பாடானதாக தெரிகிறது. இந்தியாவின் பன்முக ஆளுமைகளை புறக்கணித்து அதை  ஒரே குடையில் கீழ்   நிற்க வைபபது நாட்டின் சமுதாய கட்டுமானத்தையும் வாழ்க்கை  நெறிமுறைகளையும்    அதிரவைக்கும்படியாக இருக்கிறது.


 நமது தேர்தல்  முறை ஒரு மனிதன் ஒரு வோட்டு என்ற அடிபபடையில் உள்ளது.ஆனால் அதேநேரம் அவனுக்கு பன்முக கலாச்சரத்தில் யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்ற உரிமையும் இருக்கிறது.இந்த உரிமையை பறிப்பது  அவனது அடிப்படை உரிமையை பறிப்பது போன்றதாகும் இதேமாதிரி வேடபாளர்களுக்கும்  சமுதாய தவறுகளையும் சமூக நீதியின்மைகளையும் சுட்டிக்காட்டி அதை சரிக்கட்டும்படியான  வாக்குறுதிகளை கொடுத்து ஒட்டு வாங்க  உரிமை உள்ளது. நாடு விடுதலைக்கு பிறகு பல முன்னேற்றங்கள் அடைந்துள்ளது.தலித்துகள் இடஒதுக்கீட்டினால் கொஞ்சம் முன்னேறி உள்ளனர்.ஆனாலும் எதிர்பார்த்த அளவு முன்னேற வில்லை.அடையாள அரசியலினால் பல சமுதாயக்கொடுமைகள் நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ளன.இதை சனநாயக முறையில் தீர்க்கவேண்டும் .தேர்தலுக்காக சடடம் போடுவதால் சனநாயக பிரசனைகள் தீர்வதில்லை பிரச்சனைக்கு மூலகாரணத்தை ஒழிப்பத்தின் மூலமே தீர்வு வரும். மதத்தையும் தேர்தலையும் இணைக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.நம் நாட்டில் பல மதங்கள் உள்ளன.இதனால் தான் நம் அரசு எந்த மதத்தையும் சார்ந்திருக்கவில்லை  எல்லா மதமும் சமமாக மதிக்கபபடவேண்டும்..மதம் அரசியலில் வருவது சகஜம்.ஆனால் சடடம் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும் இன்னொரு மதத்திற்கு எதிராக இருப்பது நீதி  இன்மை யாகும்.சான்றாக இந்து மதத்தை ஒரு மதமாக கருதாமல் அது ஒரு வாழ்க்கை நெறிகாட்டி என்று 1995-ம் ஆண்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.இந்த தீர்ப்பு  தேர்தலில் இந்து மதத்திற்கு சாதகமாய் அமைந்துள்ளது.இந்த தீர்ப்பை மாற்ற நீதிமன்றம் விரும்பவில்லை என புலப்படுகிறது.இதனால் பாரத ஜனதா கடசி இந்து மதத்தை வைத்து ஒட்டு சேகரிக்கமுடியும்.


இந்துவா வாதிகள் இந்துமத போர்வையில்  தேர்தலில் வன்முறையில் ஈடுபட்டு வாக்குகள் சேகரிக்க  வாய்ப்புள்ளது.சடடபபடி தேர்தல் ஆணையம் அதை தட்டி கேட்கமுடியாது. நாம் இந்துக்கள் என்று பெருமையாக சொல்லுவோம் என்ற சொல்லாடலை வைத்து ஒட்டு கேட்கலாம். ஆனால் மற்ற மதத்தினர் கேடடால் அது ஊழல் ஆகும். தேர்தலில் மதத்தை தவறுதலாக பயன்படுத்தி பயன்  பெற சூழ்நிலை சாதகமாக உள்ளது.ஆனால் மதத்தை ஒழிப்பத்தின்முலம் தேர்தலில் ஒழுக்கத்தை கொண்டுவரமுடியும் என்பது கூடாத செயல் ஆகும். மத நடைமுறைகள் மற்றும் அரசியல், ஆட்சிமுறை, நீதி விநியோக முறைகளில்  சீர்திருத்தம் செய்தால் தான்  தேர்தல் குளறுபடிகளை தவிர்க்கமுடியும். அடுத்ததாக தேசிய சின்னங்களான தேசிய கொடி , அசோக சக்கரம் முதலியவற்றை வைத்து பிரசாரம்  பண்ணி  வோட்டு சேகரிப்பதும் சடட விரோதம் ஆகும் என தீர்ப்பு கூறியுள்ளது. இந்துத்துவா கடசிகளான   பா ஜ காவின் கடசி கொடியில் தேசிய மலரான தாமரைபபூ உள்ளது. அதேமாதிரி சிவசேனா கடசிக்கொடியில் புலி உருவம் பொறிக்கபபட்டுள்ளது.இதற்கு தேர்தல் ஆணையம் என்ன சொல்லபபோகிறது? தெலுகு தேசம் , கொங்குநாடு கடசி, நகா மக்கள் முன்னணி மிசோ தேசிய முன்னணி, தமிழ் திராவிட கடசிகள் எல்லாம் அடையாள கடசிகள். இவைகள் எல்லாம் பிராந்திய கடசிகள். இருந்தாலும் இவைகள் சனநாயக முறையில் செயல்பட்டுக்கொண்டுதானே இருக்கிறது. இதற்கு ஏன் கட்டுப்பாடு  தேவை?


சாதி மதம் மற்றும் மொழி ஆகியவற்றால் மக்களிடையே பாகுபாடு இருக்கும்போது, எந்தப் பாகுபாட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டார் களோ அந்தப் பாகுபாட்டை முன்னிறுத்திப் பேசி, பாதிப்பிலிருந்து வெளியே வர முனைவதை எப்படித் தவறெனக் கருத முடியும்?. “நம்முடைய சமூக வாழ்வில் சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றின் பங்கு முக்கிய மானதாக இருப்பதை அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது; ஆழப்பதிக்கப்பட்ட சில அடையாளங்கள் காரணமாக, ஏராளமானவர்கள் தனி நபர்களாகவும் தாழ்த்தபபடட சமூகங்களாகவும் புறக்கணிக்கப்பட்டும், பாரபட்சமாக நடத்தப்பட்டும் வந்ததே இங்கு வரலாறாக இருக்கிறது. அதிலிருந்து மீள முயற்சிப்போரை அவர்களுடைய மத, மொழி, இன, சமூக அடையாளங்களைக் குறிப்பிடுவதற்காகத் தேர்தலில் தடுப்பது, ஜனநாயகத்தின் மீது அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துவிடும்”


மக்கள் வாக்கினால் அரசு பெற்ற அதிகாரம் கொண்டு சமூக சமன்பாட்டை நோக்கிய மாற்றத்தினைக் கொண்டுவர முயல வேண்டும். அதேசமயம், அதிகாரம் என்பது தவறு நிகழாமல் தடுக்கத்தானே ஒழிய தனிமனித சுதந்திரத்திலும் அவனுக்குக் கிட்டும் வாய்ப்பிலும் அரசு தலையிடுதல் கூடாது எனவே மதத்தை  வைத்து அரசியல் நடத்தாமல் தனி மனிதனுக்கு உரிய உரிமைகளை வழங்கி ஆடசி நடத்தும் ஆடசியே சிறந்த ஆடசி ஆகும். இவ்விதிகளை தேர்தலிலும் கையாண்டால் நாடு சிறப்புற்று விளங்கும்.

அன்புடன் ஆசிரியர் எம்.ஜெயம்.