பசு வதை சட்டம்

cow

ஆர்  எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பசு வதை சடடத்தை நாடு  முழுவதும் செயல் படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இந்தியாவில் உள்ள அனைத்துச் சட்டங்களும் பசு வதைக்கு எதிராக உள்ளன. விலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்தச் சட்டம் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாடு முழுவதும் பசுவதையைத் தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும்.சட்டத்தைப் பின்பற்றி பசு பாதுகாப்புப் பணிகள் நடைபெற வேண்டும். பசுவதைக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள், பசுவைப் பாதுகாப்பதற்கான காரணத்தை அவமதிப்பதாகும் நாடு முழுவதும் பசுவதையை தடை செய்வதற்கான சட்டம் இயற்ற வேண்டும்’ என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித் துள்ளார்.


பி ஜே பி ஆடசிக்கு வந்தபிறகு இந்தியாவை இந்து நாடாக ஆக்குவதற்கு பல வகையில் முயற்சி பண்ணுகிறார்கள். மக்களை எந்த உணவு உண்ணவேண்டும் எதை   உண்ணக்கூடாது என்று கடடாயப்படுத்துவதும் அவர்களின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும்.. 2500 ஆண்டுகளுக்கு முன், புத்தர் வருணாசிரமத்தை-பசு குதிரைகளை தீயில் இட்டு வேள்வி வளர்ப்பது போன்ற பார்ப்பன கொள்கைகளை எதிர்த்தார். பசுவை கொல்லக்கூடாது அதன் கறியை சாப்பிடக்கூடாது என்பது புத்தமதத்தின் கொள்கை. எவ்வித உயிர் வதையும் பண்ணக்கூடாது என்று புத்த மதம் கூறுகிறது.எனவே மக்கள் புத்த மதத்தில் ஈர்ப்புக்கொண்டனர் மக்களை தம் வயம் இழுக்க இந்து  மதத்திலும் அஹிம்சை கொள்கையை நிலைநாட்டினர். பிராமணர்கள்  வரலாறு நெடுகிலும் மன்னர்களைப் பலவழிகளிலும் தம் வயப்படுத்தி , தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதி அமைப்பு வலிமையாகக் கட்டமைக்கப்பட்டது. அரசியலை ஆட்டிப்படைப்பதற்கு பிராமணர்கள் மதத்தைப்   தம்  ஊன்றுக்கோலாக கொண்டனர். இன்றுள்ள  பீஜே பி  முதலாளிய-சனநாயக நாடாளுமன்ற அரசமைப்பிலும் மதவழிப்பட்ட அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் ஒரு சதி தான்


1948 பிப்ரவரியில் அரசியல் நிர்ணய சபையில் சட்ட வரைவு மசோதாவை அம்பேத்கர் முதலில் தாக்கல் செய்த போது அதில் பசு பாதுகாப்பு குறித்து எந்த அம்சமும் இடம் பெறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். சில தீவிர ‘பசுப் பாது காவலர்கள்’ அவையில் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அம்பேத்கரும் அவரோடு இணைந்து பணியாற்றிய வரைவுக் குழுவினரும் பசுப் பாதுகாப்புப் பிரிவை அரசியல் சட்டத்தில் இணைக்காமல் அரசியல் சட்டத்துக்கான வழி காட்டும் கொள்கைகளில் (Directive Priniciple) இணைத்துக் கொள்ளலாம் என்ற உடன்பாட்டுக்கு வந்தனர். வழிகாட்டும் கொள்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அரசியல் சட்டம் எந்தத் திசையில் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விவரிப்பவை.


வழக்கறிஞரும் வைதீகப் பார்ப்பனருமான பண்டிட் தார்குன்ட பார்கவா என்பவர் இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். விவசாயத்தையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் எதிர்காலத்தில் வளர்ச்சி நோக்கில் நவீனப்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தில் பசு, காளை, எருது உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும். பால் தரும் பசு உள்ளிட்ட எந்த கால்நடைகளையும் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் கால்நடைகளையும் வெட்டக்கூடாது என்று அந்தத் திருத்தம் கூறியது. அம்பேத்கர், பசு பாதுகாப்பு பற்றிய விவாதங்களே அர்த்தமற்றவை என்று கருதினார். எதிர்வாதம் செய்யாமல் வழிகாட்டும் கொள்கைப் பிரிவில் இணைக்க ஒப்புக் கொண்டார். ஆனாலும் பார்கவாவுக்கு இதில் முழு திருப்தி இல்லை. பசுவைக் காப்பாற்றுவது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பிறகு சேத்கோவிந்ததாஸ் என்ற உறுப்பினரும் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போதுதான் அம்பேத்கர்   பதிலளித்தார். அம்பேத்கரின் அபாரமான அறிவுப்புலமைக்கு சான்று அவர் அளித்த பதில். அவர் இவ்வாறு கூறினார்:


“தீண்டாமை சட்டப்படி குற்றம் என்று இந்த சட்டத்தில் நாம் அறிவித்திருக்கிறோம். அதைப் போலவே பசுவதையும் குற்றம் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தீண்டாமைக் குற்றம் நேரடியாக மனிதர்களைப் பாதிப்பதாகும். பசுவை வெட்டுவது விலங்குகளைத்தான் பாதிக்கிறது. அடிப்படை உரிமைகள் என்பவை மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல. எனவே பசு பாதுகாப்பை அடிப்படை உரிமையாக்க முடியாது” என்றார் அம்பேத்கர். இந்துக்களின் மதக் கண்ணோட்டத்தில் அரசியல் நிர்ணய சபையில் இந்த விவாதம் நடக்கவில்லை. நாட்டின் எதிர்கால விவசாய வளர்ச்சி, பொருளாதாரம், விவசாயத்தை நவீனமாக்குதல் என்ற கண்ணோட்டத்தில் தான் விவாதம் நடந்தது. பசுவுக்கு மட்டுமல்ல, பயன்தரும் எந்த கால்நடைகளையும் வெட்டக் கூடாது என்றுதான் வழிகாட்டும் கொள்கையில்சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டம் மதச் சார்பின்மையை வலியுறுத்துவதால் அம்பேத்கர், ‘பசு பாதுகாப்புக்கு’ மதத்தின் கண்ணோட்டத்தை ஏற்காமல் விவசாயப் பொருளாதார கண்ணோட்டத்தோடு அதை அணுகினார். அரசியல் சட்டம் அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகிச் சென்று விடக் கூடாது என்று அவர் கருதினார்.  ஆனால் தற்போது பீஜே பி அரசு பசுவதை சடடம் கொண்டுவர எத்தணிப்பது - அரசில் சட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்பி சிதைத்து விடும் நோக்கத்தில் இருக்கிறது.


இந்த பசு வதை சடடம். பசுவுக்கு எவ்விதத்தில் வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது என்பதனை காண்போம்.. திருவள்ளுவர் காலத்தில் பிராமணனும்  பசுவும் மேன்மக்களாக-போற்றிப் பேணிக் காக்கப்பட வேண்டிய உயர்பிறப்பினராக மதிக்கப்படும் நிலை சமூகத்தில் வளர்ந்திருப்பதை கீழ்கண்ட குறள் மூலம் அறியலாம்.  


ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளி வந்தது இல் -( குறள் 1066)
அதாவது  பசுவின் நீர்வேட்கையைத் தணிப்பது சிறந்த அறம் என்று கருதப்பட்டது. பசுவுக்குத் தண்ணீர் தருவதற்காகப் பிச்சையும் எடுக்கலாம் என்பது    பொருள்.. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்த போது, பார்ப்பனர், பசு. முதியோர், குழந்தைகள் தவிர்த்து மற்றவர்களை எரிக்குமாறு ‘தீ’க்கு ஆணை இடடாள் புதுமனை புகுவிழாவின் முதல் நிகழ்வாகப் பசுவைப் புதிய வீட்டிற்குள் நுழையச் செய்கின்றனர். எனவே பிராமணர்கள் பசுவை   போற்றப்படுகிற மிருகம்  என்ற ஒரு நிலைப்பாடடை உருவாக்கி வைத்திருந்தனர்


இந்தியாவில் மாட்டுக்கறி எல்லா மதத்தினரும் சாப்பிடுகிறார்கள்.ஆனால் தலித்துகள் சாப்பிடுவதுதான் இந்துவாத மக்களுக்கு பிரசனையாக இருக்கிறது. மாட்டுக்கறி உண்பதன் மூலம் தன் சாதி வெளியே தெரிந்துவிடுமோ என்ற பதற்றமும் அச்சமும், வெளியிடத்தில் அதை உண்ணும் ஒவ்வொருவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. தனது விருப்ப உணவை உட்கொள்வதில் இப்படியொரு இழி நெருக்கடி வேறெந்த நாட்டிலாவது எவருக்காவது உண்டாகுமா என வியப்பாக இருக்கிறது. தலித் மக்கள் தங்களின் எல்லைக்குள் மிக சுதந்திரமாக உண்டு களிக்கும் மாட்டிறைச்சியை, பிற சமூகத்தினர் விரும்பினாலும் வெளிப்படையாக உண்ண முடியாது. அதை இந்து சமூகத்தின் ஆதிக்க சாதியினர்  ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாட்டிறைச்சியை உண்ணுவது, ஜாதி மாறி திருமணம் செய்து கொள்வதைப் போன்றதொரு சனாதனக் குற்றமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், மாட்டிறைச்சி என்பது வெறுமனே உணவல்ல; அது இந்துக்களின் அரசியல்! சாதிய அடுக்கை தக்க வைப்பதற்காகப்   பல காலமாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் சூழ்ச்சி!.ஒவ்வொரு மதத்தினருக்கும் எந்தெந்த உணவு உண்ணவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக கிருத்தவர்கள் ஆடு மாடு சாப்பிடலாம்.ஆனால் முயல் ஒடடகள் பன்றி  கழுகு நாரை போன்றவைகளை சாப்பிடக்கூடாது (உபாகமம் அதிகாரம் 14) .அதேமாதிரி இஸ்லாமியர்களும்     ஆடு மாடு சாப்பிடலாம்..மற்ற மதத்தினரை மாட்டுக்கறிசாப்பிடக்கூடாது என தடைபோடுவது அவர்கள் மத நம்பிக்கைக்கு   எதிரான செயல் அல்லவா!.அவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிறதல்லவா? .


பசு வைத்த சடடம் கொண்டு வருவத்தில்  தீவிரம் காட்டு பீஜே பி  ஆடசி மக்கள் வள மேம்பாட்டுக்காக  உரிய முயற்சிகள் எடுக்கவில்லை என் தோன்றுகிறது .கல்வியறிவு சுகாதாரம்,சிறு குழந்தைகள்  பராமரிப்பு போன்றவைகளில் பீஜே பி ஆடசி செய்யும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட   மிகவும்        பின்தங்கியுள்ளன..சான்றாக குழந்தைகள் பிறப்பு இறப்பில்   பி ஜெ பி ஆளும் அஸ்ஸாம்  மத்திய பிரதேசம்  ராஜஸ்தான்  உத்தர பிரதேசம் மிகவும் பின் தங்கியுள்ளன.அதே மாதிரி கல்வியிலும்   மத்திய பிரதேசம்  ராஜஸ்தான்  உத்தர பிரதேசம் ஜார்கண்ட்  போன்ற மாநிலங்கள் பின் தங்கிய நிலையிலே உள்ளன . .வறுமைக்கோட்டிருக்கீழ் வாழ்வோரில் பாதிபேர்  இந்தியாவிலும் சீனாவிலும்தான் வாழ்கிறார்கள்  என புள்ளி விவரம் சொல்லுகிறது. எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் அதிகமாக      நடக்கும் மாநிலங்ககளில்  பீஜே பி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் குஜராத் உத்திர  பிரதேசமும் அடங்கும்..நாட்டின் மனித நல மேம்பாடுகள் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும்போது மத உணர்வை தூண்டிவிடும் செயல்களை முனைப்பாக செய்யும் பிஜேபி அரசியல் நோக்கத்துடன் தான் செய்கிறது என்பது தெளிவாகிறது.. 

 

cowபசு வதை சட்டம் கொண்டு வருவது சிறுபான்மையினரை அச்சுறுத்தி சாதி கலவரத்தை உண்டுபணணி அதில் குளிர் காய்ந்து  ஒரு சிலர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்.இதை தற் போதைய     அரசு  கவனத்தில் கொண்டு அரசியல் நடத்தவேண்டும்.

 

அன்புடன் ஆசிரியர் எம் ஜெயம்.